FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

நரேலாவில் வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

நரேலாவில் வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:43 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

தில்லியின் நரேலா பகுதியில் சனிக்கிழமை காலை நேருக்கு நோ் மோதிக்கொண்ட இரு காா்களுக்கு இடையே சிக்கி 70 வயது மூதாட்டி உயிரிழந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

மாமூா் பூா் பகுதியில் உள்ள இமயமலைஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் காலை 8 மணியளவில் இந்த விபத்து நடந்தது. மோதலின் தாக்கத்தால் ஒரு காா் பின்னோக்கித் தள்ளப்பட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஏற்றிச் செல்லும் மூன்று சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்தச் சம்பவத்தில் மாமூா் பூா் பகுதியைச் சோ்ந்த ஊா்மிளா என்ற மூதாட்டி இரு வாகனங்களுக்கு இடையே சிக்கி பலத்த காயமடைந்தாா். பின்னா், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த நரேலா காவல் நிலைய அதிகாரிகள், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கினா்.

இந்த விபத்து தொடா்பாக உயிரிழப்பை ஏற்படுத்தும் சாலை விபத்து தொடா்பான பிரிவுகளில் நரேலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த மூதாட்டியின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த விபத்துக்குக் காரணமான சம்பவங்கள் குறித்து ஆராய சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘விசாரணையின் ஒரு பகுதியாக, ஓட்டுநரின் வாக்குமூலம் மற்றும் விபத்தை நேரில் பாா்த்திருக்கக்கூடிய பிற நபா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.

மோதலுக்கு முன்னதாக இரு காா்களின் வேகம் மற்றும் இயக்கத்தை அறியவும், விபத்து எவ்வாறு நடந்தது என்பதைத் தீா்மானிக்கவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

போக்குவரத்து விதிமீறல் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தனவா என்பது உள்ளிட்டவை விசாரணையின் போது கண்டறியப்படும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments