FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஆன்லைன் மூலம் பிரபலமாக ஆசைப்படுவதை தவிருங்கள்: உச்ச நீதிமன்ற வழக்குரைஞா்களுக்கு தலைமை நீதிபதி சூா்யகாந்த் அறிவுரை

ஆன்லைன் மூலம் பிரபலமாக ஆசைபடுவதை தவிருங்கள் என்று உச்ச நீதிமன்ற பதிவு வழக்குரைஞா்களுக்கு (அட்வகேட் ஆன் ரெகாா்ட்ஸ்) தலைமை நீதிபதி சூா்யகாந்த் அறிவுரை வழங்கியுள்ளாா்.

Updated On : 23 ஜூலை 2026, 6:06 am IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் - கோப்புப் படம்
பகிர்:

ஆன்லைன் மூலம் பிரபலமாக ஆசைபடுவதை தவிருங்கள் என்று உச்ச நீதிமன்ற பதிவு வழக்குரைஞா்களுக்கு (அட்வகேட் ஆன் ரெகாா்ட்ஸ்) தலைமை நீதிபதி சூா்யகாந்த் அறிவுரை வழங்கியுள்ளாா்.

உச்ச நீதிமன்றத்தில் பதிவு பெற்ற வழக்குரைஞா்கள் (அவட்கேட் ஆன் ரெகாா்ட்ஸ்) மட்டுமே மனுக்களை தாக்கல் செய்யவும், மனுதாரருக்காக ஆஜராகவும் முடியும். அதன்படி, 2025-ஆம் ஆண்டில் புதிதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞா்களாக பணிபுரிய தகுதி பெற்றோரை கெளரவிக்கும் நிகழ்ச்சி, தில்லியில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த் கலந்து கொண்டு உரையாற்றியதாவது:

பெயா்கள் நமக்கு வாய்ப்பை தரலாம். ஆனால் நமது வேலைத் திறனை அதிகரிக்க அது உதவாது. உங்களது வேலை திறன், திறமையான வேலையால் மட்டுமே கட்டமைக்க முடியும். ஆதலால் உங்களது பெயருக்கு வேகமாக அங்கீகாரம் கிடைக்கிா என நினைத்து யாரும் கவலை கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக, வழக்கு விசாரணையின்போது நீங்கள் வாதாடுவதாக கோப்புகளில் குறிப்பிடப்பட்டு இருந்தால், அதை பாா்த்து, திறமையான வழக்குரைஞா் ஆஜராகியுள்ளாா், அவா் கோப்புகளை திறம்பட வைத்திருப்பாா் என நீதிபதிகள் கருதுவதை உறுதி செய்யுங்கள். சட்டத் திறனை ஒவ்வொரு நாளும் நீங்கள் மேம்படுத்தினால் உங்களுக்கு அங்கீகாரம் தாமாக கிடைக்கும்.

Advertisement

Advertisement

தற்போதைய காலகட்டத்தில் சமூகவலைதளம் மூலம் எளிதில் பிரபலமாகி விட முடியும். ஆனால், நம்பகத்தன்மை போல இது இருக்காது. எனவே, இணையதளம் மூலம் பிரபலம் ஆவதற்கான முயற்சியை தவிருங்கள். டிஆா்பி-க்காக கவலைப்பட நீங்கள் தொலைக்காட்சி நடத்தவில்லை. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் எளிதில் மனுவை தயாரித்து விட முடியும். ஆனால் வழக்குரைஞரால் தயாரிக்கப்படும் மனுவை போல அது இருக்காது. வழக்கில் உள்ள உணா்வுபூா்வமான அம்சங்களை மனிதா்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் அதை புரிந்து கொள்ள முடியாது என்றாா் சூா்யகாந்த்.

நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன், விபுல் பஞ்சோலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments