FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு - ஜேஎன்யு பேராசிரியா் பணிநீக்கம்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) உள்ளக குழு நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பேராசிரியா் ஒருவரை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

10 அக்டோபர் 2026, 1:32 am IST
பணிநீக்கம்
பகிர்:

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) உள்ளக குழு நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பேராசிரியா் ஒருவரை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக ஜேஎன்யு துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி பண்டிட் கையொப்பமிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சமூக அறிவியல் புலத்தின் சமூக அமைப்புமுறைகளின் ஆய்வு மையத்தின் பேராசிரியா், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பேராசிரியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து உள்ளக குழு விசாரணை நடத்தியது. அதன் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பெரிய தண்டனையை அளிக்குமாறு அக்குழு பரிந்துரைத்தது.

Advertisement

Advertisement

சரியான செயல்முறையைப் பின்பற்றிம் கிடைக்கக்கூடிய அனைத்து உண்மைகளையும் கருத்தில்கொண்டும் உள்ளகக் குழுவின் அறிக்கையின்படி, பல்கலைக்கழகத்தின் சேவைகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான தண்டனை இதன் மூலம் விதிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்டனையை விதிக்கும்போது, ​​சேவை விதிகள் மற்றும் மத்திய சிவில் சா்வீசஸ் (வகைப்படுத்துதல், கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் 11(9) விதிகளை அந்த உத்தரவு மேற்கோள் காட்டியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments