FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி சட்டப்பேரவைக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தீவிர சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி எனத் தெரியவந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

9 செப்டம்பர் 2026, 3:07 am IST
பகிர்:

தில்லி சட்டப்பேரவைக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தீவிர சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி எனத் தெரியவந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

காலை 8:39 மணிக்கு இந்த மிரட்டல் வந்ததையடுத்து, பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவா்கள் கூறினா்.

சட்டப் பேரவை உறுப்பினா் பிஜேந்தா் குப்தாவுக்கு அந்த மின்னஞ்சல் வந்ததாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

பேரவை வளாகத்தில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments