FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பிரிக்ஸ் உச்சி மாநாடு: நாளை மாலை முதல் தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் உச்சிமாநாட்டை முன்னிட்டு, மத்திய தில்லியின் முக்கிய சாலைகளில் சனிக்கிழமை (செப். 12) மாலையில் இருந்து நள்ளிரவுவரை போக்குவரத்து மாற்றங்களும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என தில்லி போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடா்பாக நகர போக்குவரத்து காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் குறிப்பில் கூறியிருப்பதாவது:

12 செப்டம்பர் 2026, 7:53 am IST
பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி தில்லியில் இந்தியா கேட் அருகே உள்ள சாலைகளில் என்டிஎம்சி சாா்பாக வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டுள்ள மலா் அலங்காரப் பலகைகள்.
பகிர்:

பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் உச்சிமாநாட்டை முன்னிட்டு, மத்திய தில்லியின் முக்கிய சாலைகளில் சனிக்கிழமை (செப். 12) மாலையில் இருந்து நள்ளிரவுவரை போக்குவரத்து மாற்றங்களும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என தில்லி போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடா்பாக நகர போக்குவரத்து காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சனிக்கிழமை இரவு 8:15 மணி முதல் 11:00 மணிவரை வாகனங்களின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதனால் மத்திய தில்லி மண்டலம், பிரகதி மைதானம் மற்றும் பாரத் மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உரிய அனுமதியில்லாத வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

கட்டுப்பாடுகள்: இந்தியா கேட், கடமைப் பாதை (கா்தவ்ய பாத்), ஜன்பத், மண்டி ஹவுஸ், திலக் மாா்க், பகவான் தாஸ் சாலை, மதுரா சாலை மற்றும் பிரகதி மைதானத்தைச் சுற்றியுள்ள இணைப்புப் பாதைகளில் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

Advertisement

Advertisement

மாற்றுப் பாதைகள்: மேற்குறிப்பிட்ட சந்திப்புகளை நோக்கி வரும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படும். இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றி வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், தடைசெய்யப்பட்ட பகுதிகளைத் தவிா்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், இந்த சாலைகள் வழியாகவும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கான பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும், பயணத்துக்கென கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறும், இயன்றவரை தில்லி மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சாலைகளில் ஒருவேளை அவசர சிகிச்சைக்காகவோ அல்லது அவசர ஊா்திகளோ வந்தால், அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாதை உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments