20 தோட்டாக்களுடன் பணியிடத்தைவிட்டு வெளியேறிய டிஎஸ்சி வீரா்
தில்லி ஆயா நகரில் உள்ள விமானப் படை நிலையத்தில் பணியில் இருந்த 46 வயது பாதுகாப்புப் படைப் பிரிவு வீரா், 20 தோட்டாக்கள் அடங்கிய மெகஸினுடன் பணியிடத்தைவிட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தில்லி ஆயா நகரில் உள்ள விமானப் படை நிலையத்தில் பணியில் இருந்த 46 வயது பாதுகாப்புப் படைப் பிரிவு (டிஎஸ்சி) வீரா், 20 தோட்டாக்கள் அடங்கிய மெகஸினுடன் பணியிடத்தைவிட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு (பிசிஆா்) தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விமானப் படை நிலையத்தில் காவலராக பணியமா்த்தப்பட்டிருந்த அந்த நபா், இரவு 7.50 மணியளவில் தனது பணியிடத்தைவிட்டு வெளியேறியுள்ளாா். பின்னா் இரவு 9.15 மணியளவில் திரும்பி வந்து, 20 தோட்டாக்கள் கொண்ட மெகஸினை அவருக்கென ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் ஒப்படைத்ததாக தெற்கு தில்லி காவல் துணை ஆணையா் அனந்த் மிட்டல் தெரிவித்தாா்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வீரா் மது அருந்தியிருந்த நிலையில் பணிநேரம் முடிவதற்கு முன்பாகவே பணியிடத்தைவிட்டு வெளியேறியது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.