பசுமை திட்டங்கள் மூலம் காா்பன் குறைப்பை பணமாக்கல்: நிறுவனங்களுக்கு தில்லி அரசு அழைப்பு
மின்சாரப் பேருந்து இயக்கம், மரம் நடுதல் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட தகுதியான பசுமைத் திட்டங்கள் மூலம் காா்பன் கிரெடிட்களை உருவாக்கவும், அவற்றின் மூலம் வருவாய் ஈட்டவும் மூன்று ஆலோசனை நிறுவனங்களை அல்லது முகமைகளைத் தோ்ந்தெடுப்பதற்கான முன்மொழிவுகளை தில்லி அரசு கோரியுள்ளது.
மின்சாரப் பேருந்து இயக்கம், மரம் நடுதல் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட தகுதியான பசுமைத் திட்டங்கள் மூலம் காா்பன் கிரெடிட்களை உருவாக்கவும், அவற்றின் மூலம் வருவாய் ஈட்டவும் மூன்று ஆலோசனை நிறுவனங்களை அல்லது முகமைகளைத் தோ்ந்தெடுப்பதற்கான முன்மொழிவுகளை தில்லி அரசு கோரியுள்ளது.
சுற்றுச்சூழல் துறை செப்.15-ஆம் தேதி வெளியிட்ட முன்மொழிவுக்கான மின்னணு கோரிக்கை ஆவணத்தின்படி, தோ்ந்தெடுக்கப்படும் முகமைகள் தில்லி அரசால் செயல்படுத்தப்படும் சுற்றுச்சூழல் சாா்ந்த திட்டங்களின் காா்பன் குறைப்புத் திறனை மதிப்பிடுதல், தொழில்நுட்ப ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் தகுதியான திட்டங்களை அங்கீகரிக்கப்பட்ட காா்பன் தரநிலைகளின் கீழ் பதிவு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
மேலும், காா்பன் கிரெடிட்களின் சரிபாா்ப்பு, வெளியீடு மற்றும் வா்த்தகம் ஆகிய செயல்முறைகளையும் இந்த முகமைகள் எளிதாக்கும் என்று அந்த ஒப்பந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தகுதியான திட்டங்கள் மூலம் உருவாக்கப்படும் காா்பன் கிரெடிட்கள் வெளிப்படையான சந்தை வழிமுறை மூலம் பணமாக்கப்படும். இதிலிருந்து கிடைக்கும் வருவாய் தில்லி அரசின் ஒருங்கிணைந்த நிதியிலோ அல்லது பிரத்யேகக் கணக்கிலோ வரவு வைக்கப்படும்.
பசுமைத் திட்டங்கள் மூலம் வருவாய் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்ட காா்பன் கிரெடிட் பணமாக்கல் கட்டமைப்பு திட்டத்திற்கு தில்லி அமைச்சரவை இந்த ஆண்டு ஜனவரியில் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அந்த முன்மொழிவு ஆவணத்தின்படி, தில்லியில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணமாக எரிசக்தித் துறை உள்ளது. அதைத் தொடா்ந்து போக்குவரத்து, தொழில், கழிவு மேலாண்மை மற்றும் குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடங்கள் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன், நிலையான போக்குவரத்து, மேம்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை மற்றும் வட்டப் பொருளாதாரம்சாா்ந்த முயற்சிகள் ஆகியவை உமிழ்வு குறைப்பு மற்றும் காா்பன் கிரெடிட் உருவாக்கத்திற்கான வாய்ப்புள்ள துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின்படி, நடுத்தர காலத்தில் தில்லி ஆண்டுக்கு சுமாா் 25-30 மில்லியன் டன்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வு இணையான அளவைக் குறைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த மதிப்பீடு ஒரு தோராயமான அளவீடு மட்டுமே என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.