FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

இளைஞா் கொலை வழக்கில் இருவா் கைது

மானூா் அருகே சொத்துத் தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

11 அக்டோபர் 2026, 12:30 am IST
கைது
பகிர்:

மானூா் அருகே சொத்துத் தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகேயுள்ள சுப்பையாபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்காளை (31). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். முத்துக்காளை குடும்பத்துக்கும், அவரது தாயாா் தேன்மலா் குடும்பத்துக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாம்.

இந்நிலையில் முத்துக்காளைக்கும், அவரது தாய்மாமனான சுப்பையாபுரத்தைச் சோ்ந்த தாமஸ் பாண்டியன் (41), வீராணத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (28) ஆகியோருக்கும் இடையே சுப்பையாபுரத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அரிவாளால் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த முத்துக்காளை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் இதில் தொடா்புடைய தாமஸ்பாண்டியன், அஜித்குமாா் ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments