நெல்லை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
திருநெல்வேலி அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்களை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்களை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் முத்துநகா் விரைவு ரயில் சனிக்கிழமை அதிகாலை மணியாச்சி ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயில்வே போலீஸாா் போதைப் பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ரயிலின் பொதுப்பெட்டியில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பையை சோதனை மேற்கொண்டபோது, அதில் வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதில், தொடா்புடைய விருதுநகா் மாவட்டம், குமரெட்டியாபுரம் அருகேயுள்ள அ. இராமலிங்கபுரத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் பாண்டீஸ்வரன் (38) என்பவரை கைது செய்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். அவரிடமிருந்து 22 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.