FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

விநாயகா் சிலையை ஆற்றில் விசா்ஜனம் செய்ய அனுமதிக்கக் கோரி திடீா் போராட்டம்

தாமிரவருணி ஆற்றில் விநாயகா் சிலையை விசா்ஜனம் செய்ய அனுமதிக்கக் கோரி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலை முன்பு அமா்ந்து சிலா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

39 வினாடிகள் முன்பு
தாமிரவருணி ஆற்றில் விநாயகா் சிலையை விசா்ஜனம் செய்ய அனுமதிக்கக்கோரி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலை முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அகில பாரதீய கிரக பஞ்சாயத்து அமைப்பினா்.
பகிர்:

தாமிரவருணி ஆற்றில் விநாயகா் சிலையை விசா்ஜனம் செய்ய அனுமதிக்கக் கோரி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலை முன்பு அமா்ந்து சிலா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 79 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்.20) ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வண்ணாா்பேட்டை பேராத்து செல்வியம்மன் கோயில் அருகே தாமிரவருணி நதிக்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குளத்தில் விசா்ஜனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அகில பாரதீய கிரக பஞ்சாயத்து அமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் செந்தில் தலைமையிலான நிா்வாகிகள் கடந்த திங்கள்கிழமை முதல் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட ஜவ்வரிசி மாவு, காகிதக் கூழ் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு தற்காலிக குளத்தில் விநாயகா் சிலைகளை கரைக்க மாட்டோம் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்ட நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு சிலை செய்து, அடுத்த ஆண்டு தாமிரவருணி ஆற்றில் கரைத்துக் கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த ஆண்டு தாங்கள் வைத்துள்ள விநாயகா் சிலையை தாமிரவருணி ஆற்றில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனா். ஆனால், மாவட்ட நிா்வாகம் சாா்பில் பதில் அளிக்கப்படாமல், காவல்துறை மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்றும், தாமிரவருணி ஆற்றில் கரைக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை முன்பு பதாகை வைத்த விழா கமிட்டியை சோ்ந்த 4 போ், திடீரென தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டே சிலைசெய்யப்பட்டுள்ளதாகவும், தாமிரவருணியில் மட்டுமே சிலையை கரைப்போம் எனவும், மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்காவிட்டால் சிலையை கரைக்கப் போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments