தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
குமரி மாவட்டத்தில் தேசிய இளைஞர் விருதுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தேசிய இளைஞர் விருதுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கானப் பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் (வயது 15 -29 ) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2016-17 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் செய்த இளைஞர் நலப் பணிக்காக விருதுகள் நிகழாண்டில் வழங்கப்படவுள்ளது.
இந்த விருது பெறும் இளைஞர்கள் 25 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதிகள்: 15 வயது முதல் 29 வயதுக்குள்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்; சமூகப் பணியில் அதிக ஆர்வமும், பணியும் ஆற்றியிருக்க வேண்டும்; மத்திய அரசு, மாநில அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது; வாழ்நாளில் ஒருவருக்கு ஒருமுறைதான் இந்த விருது வழங்கப்படும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கமும், பதக்கமும் வழங்கப்படும்; தொண்டு நிறுவனங்கள் பதிவுத்துறை சட்டத்தின்படி கடந்த 3 ஆண்டு அமைப்பு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும்; சமூக நலன் சார்ந்த திட்டங்களை தன்னார்வத்துடன் ஈடுபடும் தகுதி அவசியம்; எந்தவித சுயலாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் ஆற்றியிருக்கக்கூடாது; குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது; குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது இளைஞர்களை சமுதாய பணியில் ஈடுபடும் வகையில் சேவை ஆற்றியிருக்க வேண்டும்; இதற்கு முன் விருது பெற்ற தொண்டு நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது; சமுதாய நலப் பணியில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்களை இணைக்கக்கூடாது.
எனவே, சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செப். 15 ஆம் தேதிக்குள் https://innovate.mygov.in/nya என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.