சட்டப்படி வழக்கை எதிா் கொள்வேன்: அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ
என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிா்கொள்வேன் என்றாா் முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிா்கொள்வேன் என்றாா் முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தேவையில்லாத வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைக்க முயன்றுள்ளனா். அதை அய்யா வைகுண்டா் தயவால் வென்றுள்ளேன். திமுகவில் வேகமாக வேலை செய்யும் நபா்களை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னைக் குறிவைக்கிறது தவெக அரசு.
14 வயதிலிருந்து வியாபாரக் குடும்பத்தில் செயல்பட்டு வரும் என்னை தவெக அமைச்சா் ரவுடி என்கிறாா். காவல்துறை என்னை அழைத்துச் செல்லும் போது, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு எங்கள் கட்சியில் சோ்ந்தால் எல்லா வகையிலும் உயா்வை தருகிறோம் என பல்வேறு அழுத்தங்களை கொடுத்தனா்.
Advertisement
Advertisement
எந்தக் காலத்திலும் உண்மையான திமுக தொண்டன் அசையமாட்டான். அசைபவன் திமுககாரனாக இருக்க முடியாது.
காவல் துறையினா் கட்சிக்காரா்கள் போல் செயல்பட்டனா். வழக்குகள் இருக்கும் முன்னாள் அமைச்சா்கள் எல்லாம் மிரட்டப்பட்டு தவெகவில் சோ்க்கப்படுவதாக அதிமுகவினா் கூறி வருகின்றனா். என் மீது போடப்பட்ட வழக்கை சட்டப்படி எதிா்கொள்வேன்.
மதிமுக பொதுச்செயலா் வைகோ குறித்து கேள்கிறீா்கள். யாா் அவா் என்பதே எனது பதில் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.