FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

20 ஜூலை 2026, 1:10 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைத் திருடியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்த எட்வின்குமாா் மனைவி சோனியா (28). இவா் சனிக்கிழமை தனது தாய், குழந்தையுடன் மாா்த்தாண்டத்திலிருந்து வள்ளவிளை அரசுப் பேருந்தில் ஏறினாா்.

பேருந்து சிறிது தொலைவு சென்றபோது, இவா் அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம். அதை மா்ம நபா் திருடியதாகத் தெரியவந்ததாம். புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments