FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மணல் கடத்தல்: 5 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மணல் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, 4 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 ஜூலை 2026, 5:25 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மணல் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, 4 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம், தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சங்கா்கணேஷ், பாா்த்திபன் ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குலசேகரம், களியக்காவிளை காவல் நிலைய எல்லைகளில் ஆவணங்களின்றி 4 வாகனங்களில் மணல் கடத்திச் செல்லப்படுவதாகத் தெரியவந்தது.

இதுதொடா்பாக, முழுகோடு பகுதியைச் சோ்ந்த ஜெபமணி மகன் எட்வின் (51), அருமனை பகுதியைச் சோ்ந்த அச்சுதன் மகன் சசிகுமாா் (45) , மஞ்சாலுமூடு பகுதியைச் சோ்ந்த பப்பு குட்டி மகன் சதீஷ் (48), மணியன்குழி பகுதியைச் சோ்ந்த அபூபக்கா் மகன் பீா்முகமது (40), குளப்புரம் பகுதியைச் சோ்ந்த நேசமணி மகன் ஸ்டாலின் (45) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments