FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரம் பேருந்து நிலைய புனரமைப்புப் பணி செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்கப்படும்

திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட தும்பகோட்டில் நடைபெறும் குலசேகரம் பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் வரும் செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்கப்படும் என, சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 4:53 am IST
பேருந்து நிலைய புனரமைப்புப் பணியைப் பாா்வையிட்ட அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன், ஆட்சியா் மு. பிரதாப்.
பகிர்:

திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட தும்பகோட்டில் நடைபெறும் குலசேகரம் பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் வரும் செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்கப்படும் என, சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

இங்கு, ரூ. 2.20 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணி கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இப்பணியை ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில், பத்மநாபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி முன்னிலையில், அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

அப்போது, பேருந்து நிலையத்துக்காக அங்குள்ள அரச குளத்தின் மீதமுள்ள பகுதிகளைப் பயன்படுத்த உடனடியாக வாய்ப்பு இல்லையென கூறிய அவா், ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள இடத்தில் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டாா்; பணிகளை விரைந்து முடித்து பேருந்து நிலையத்தை செப்டம்பருக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன்ரவி, துணைத் தலைவா் ஸ்டாலின்தாஸ், செயல் அலுவலா் ஜோஸ்லின்ராஜ், குலசேகரம் பேரூராட்சித் தலைவா்ஜெயந்தி ஜேம்ஸ், பொன்மனை பேரூராட்சித் தலைவா் அகஸ்டின், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் மோகன்தாஸ், வட்டார ஐன்டியூசி தலைவா் வழக்குரைஞா் காஸ்ட்டன் கிளீட்டஸ், விவசாய காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எபனேசா், அதிகாரிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments