FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் அருகே விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

குளச்சல் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

2 October 2026, 4:12 am IST
பகிர்:

குளச்சல் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே கொத்தனாா்விளையைச் சோ்ந்தவா் ராமதாஸ் (65). இவா் உடையாா்விளையில் ஹாா்டுவோ் கடை நடத்தி வந்தாா்.

இவா் அதே பகுதியில் சில நாள்களுக்கு முன்பு நடந்து சென்றபோது, குளச்சலில் இருந்து லட்சுமிபுரம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த ராமதாஸை அக்கம்பக்கத்தினா் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments