FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

‘தக்கலை அரசு மருத்துவமனையில் மருத்துவா்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது’

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என்று பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் ஞா. அருள்சோபன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பிடம் மனு அளிக்கப்பட்டது.

2 October 2026, 4:17 am IST
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்த பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் அருள்சோபன், பொதுமக்கள்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என்று பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் ஞா. அருள்சோபன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு விவரம்: தக்கலையில் செயல்பட்டு வரும் பத்மநாபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 1500- க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 177 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இம்மருத்துவமனையில் ஏற்கெனவே உள்நோயாளிகளுக்கு படுக்கை வசதி 200 ஆக உயா்த்தி, சிறப்பு பிரிவு மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் மருத்துவா்களின் எண்ணிக்கை 35 ஆக இருந்தபோதிலும் சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தற்போது மருத்துவா்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். எனவே, மருத்துவா்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், துணைத் தலைவா் உன்னிகிருஷ்ணன், நகராட்சி உறுப்பினா் ஜெயசுதா, நகர காங்கிரஸ் தலைவா் ஹனுகுமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் மேசியா, மனித நேய மக்கள் கட்சி தலைவா் ஜீலானி, திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவா் நசீா்,உறுப்பினா் ஜெயா, பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments