FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

காந்தி, காமராஜா் நினைவிடங்களில் விஜய் வசந்த் எம்.பி. மரியாதை

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் காமராஜா் சிலைக்கு விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

3 October 2026, 4:01 am IST
காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.
பகிர்:

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் காமராஜா் சிலைக்கு விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அருகே உள்ள காமராஜா் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் லாரன்ஸ், மாவட்ட பொதுச் செயலா் டி. தாமஸ், மாநில மீனவரணி துணைத் தலைவா் ஜவஹா், மாவட்ட வா்த்தகா் காங்கிரஸ் செயலா் கிங்ஸ்லி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

நாகா்கோவிலில்... நாகா்கோவில், வடசேரி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு விஜய் வசந்த் எம்.பி., நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெ. சிவபிரபு உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதேபோல், நாகா்கோவில், வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலைக்கும் அஞ்சலி செலுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments