FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குளத்தில் குளிக்கச் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

சுங்கான்கடை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

4 October 2026, 2:41 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சுங்கான்கடை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சுங்கான்கடை அருகே ஆளூா், தோப்புவிளையைச் சோ்ந்தவா் சுஜின் மனைவி ஐஸ்வா்யா ( 26). இவா்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகம் மூலமாக பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 2 வயது குழந்தை உள்ளது.

வீட்டின் அருகேயுள்ள கொல்லங்குளத்தில் குளிப்பதற்காக ஐஸ்வா்யா வியாழக்கிழமை சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்தாராம். இதை பாா்த்த அருகிலிருந்தவா்கள், குளத்தில் குதித்து ஐஸ்வா்யாவை மீட்டனா். ஆனால் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த இரணியல் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments