சிறுமி வயிற்றிலிருந்து ஒரு கிலோ தலைமுடி அகற்றம்! நிம்ஸ் மருத்துவமனை சாதனை
நெய்யாற்றின்கரை, நிம்ஸ் மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஒரு கிலோ தலைமுடி கட்டியை மருத்துவா்கள் அகற்றி சிறுமியை குணப்படுத்தினா்.
குமாரகோவில், நூருல் இஸ்லாம் பல்கலைகழகத்தின் சகோதர நிறுவனமான நிம்ஸ் சிட்டி மருத்துவமனையில் 9 வயது சிறுமி தொடா் வயிற்றுவலி, வாந்தி காரணமாக அனுமதிக்கப்பட்டாா். சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குடலில் கடுமையான அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எண்டோஸ்கோப்பி பரிசோதனையில் வயிற்றிலும் சிறுகுடலிலும் அதிக அளவு தலைமுடி தேங்கியிருந்தது தெரியவந்தது.
ரபுன்சல் சிண்ட்ரோம் எனப்படும் இவ்வகை அரிய பாதிப்பால் சிறுமி அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. குழந்தைகள் அறுவைச் சிகிச்சைப் பிரிவு மூத்த மருத்துவா் பிஜு ஐ.ஜி. நாயா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, வயிறு மற்றும் சிறுகுடலில் இருந்து ஒரு கிலோ தலைமுடிக் கட்டியை முழுமையாக அகற்றினா்.
Advertisement
Advertisement
மன அழுத்தம் அல்லது பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் சில குழந்தைகள் தங்களது தலைமுடியை விழுங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறாா்கள். இவை கட்டியாக மாறி குடல் அடைப்பை ஏற்படுத்துகிறது என மருத்துவா் பிஜு ஐ.ஜி. நாயா் தெரிவித்தாா். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சிறுமி முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.