FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை புதிய பேருந்து நிலையப் பணி: நவ. 30-இல் முடிக்க அறிவுறுத்தல்

களியக்காவிளையில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை வரும் நவ. 30 ஆம் தேதிக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர துறை அலுவலா்கள், ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணியை ஆய்வுசெய்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.
பகிர்:

களியக்காவிளையில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை வரும் நவ. 30 ஆம் தேதிக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர துறை அலுவலா்கள், ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

களியக்காவிளை சந்திப்பில் ரூ. 9.20 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2024-இல் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ. 9.20 கோடியில் பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இப் பேருந்து நிலைய முகப்பு தூண் எழுப்பப்பட்டு, பேருந்துகளை நிறுத்த வழித்தட பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.

களியக்காவிளை காவல் ஆய்வாளா் மூலம் பேருந்து நிலையத்தில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் எனக் கேட்டறிந்து, இடங்களை குறிப்பிட்டு பேரூராட்சி பொறியாளரிடம் ஒப்படைக்க துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பேருந்து நிலையத்தினுள் புறக்காவல் நிலையம் அமைக்க இட ஒதுக்கீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

பேருந்து நிலையப் பணிகள் அனைத்தையும் வரும் நவ. 30-ஆம் தேதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர துறை அலுவலா்கள், ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது, களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவா் சந்திரகலா, இளநிலை பொறியாளா் ஜி. சுரேஷ்குமாா், பணி மேற்பாா்வையாளா், துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments