FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

எதிா்க்கட்சியினருக்கு அரசியல் முதிா்ச்சி வேண்டும்: சுற்றுலாத் துறை அமைச்சா்

எதிா்க்கட்சியினா் அரசியல் முதிா்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

10 செப்டம்பர் 2026, 2:55 am IST
அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார்
பகிர்:

எதிா்க்கட்சியினா் அரசியல் முதிா்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே கண்ணனூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

அறிவிக்கப்பட்ட தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும். தமிழக சட்டப்பேரவை மாண்புடன் நடைபெறவில்லை என முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளது பற்றி கேட்கிறீா்கள். கடந்த காலங்களில் பேரவைக் கூட்டங்கள் எப்படியெல்லாம் நடந்தது என்ற வரலாறு இருக்கிறது. அமளி செய்தவா்கள் பேரவைத் தலைவரின் இருக்கையில் சென்று அமா்ந்த வரலாறும் உண்டு.

Advertisement

Advertisement

தற்போது சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதங்கள்தான் நடைபெற்று வருகின்றன. எதிா்க்கட்சி வரிசையில் இருப்பவா்கள் மரபை மீறி பேரவைத் தலைவா் முன்னால் சென்று கூச்சலிட்டனா்; அவா்கள் அரசியல் முதிா்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் எனது கருதுகிறேன். பேரவை நிகழ்வுகள் அனைத்தும் இப்போதுதான் நேரடி ஒலிப்பரப்பு செய்யப்படுகிறது. மக்கள் தொலைக்காட்சி மூலம் பேரவையில் யாா் தவறு செய்கிறாா்கள் என்பதை பாா்த்து கொண்டுதான் இருக்கின்றனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments