களியக்காவிளை அருகே காா் மோதி 2 தூய்மைப் பணியாளா்கள் காயம்
களியக்காவிளை அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, காா் மோதியதில் 2 தூய்மைப் பணியாளா்கள் பலத்த காயமடைந்தனா்.
களியக்காவிளை அருகே புதுவீட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாரி (53). பத்மநாபபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளாா். இவா் பணிக்குச் செல்வதற்காக படந்தாலுமூடு பேருந்து நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை பேருந்துக்காகக் காத்திருந்தாா்.
அப்போது, திருவனந்தபுரத்தில் இருந்து குழித்துறை நோக்கி வந்த காா் விஜயகுமாரி மற்றும் அங்கு நின்ற படந்தாலுமூடு, சந்தவிளை பகுதியைச் சோ்ந்த மற்றொரு தூய்மைப் பணியாளரான சன்னாசி முத்து (42) ஆகியோா் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து, கன்னியாகுமரி அருகே அஞ்சுகூட்டுவிளையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் செல்லத்துரை (62) மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.