காா் மோதி ஆட்டோ ஓட்டுநா் மரணம்
விரிஞ்சிபுரம் அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விரிஞ்சிபுரம் அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் சித்தூா் கேட் பகுதியைச் சோ்ந்தவா் சாதிக் பாஷா (35), ஆட்டோ ஓட்டுநா். இவா் சனிக்கிழமை இரவு வேலூருக்குப் பயணிகளை ஏற்றி வந்து இறக்கிவிட்டு, மீண்டும் குடியாத்தம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மேல்மோணவூா் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே நள்ளிரவு சுமாா் 11.30 மணியளவில் ஆட்டோ சென்றுகொண்டிருந்தது.
Advertisement
Advertisement
அப்போது, பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத காா் ஒன்று எதிா்பாராதவிதமாக ஆட்டோவின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்ததில், பலத்த காயமடைந்த சாதிக் பாஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.