திருவட்டாறில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் வட்டக் கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் வட்டக் கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், அயலகப் பணி போன்ற ஒப்பந்த முறைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்திப்பட்டன.
வட்டத் தலைவா் வி. புஷ்பராஜ் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் கே. சந்திரன் பேசினாா். தமிழ்நாடு பேரூராட்சி ஊழியா் சங்க மாவட்டத் தலலைவா் சி. குமாா் வாழ்த்திப் பேசினாா். மாவட்டப் பொருளாளா் டி. ஜோஸ் நிறைவுரையாற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ. துரைராஜ் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.