குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
திங்கள்நகா் மாங்குழி ரோடு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் அனிஷ் (34), இரணியல் காவல் நிலையப் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இவா் மீது ஈத்தாமொழி, திருவட்டாறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல, ஆளூா் பிராந்தனேரி பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் (33), வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருந்தாா். இவா் மீது இரணியல், பூதப்பாண்டி, உவரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகரின் பரிந்துரை, ஆட்சியா் மு. பிரதாப்பின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், அனிஷ், அருணாச்சலம் ஆகியோா் வியாழக்கிழமை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.