மீனவா் உயிரிழப்பில் சந்தேகம்: மனைவி புகாா்
முட்டம் கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மீனவா் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி குளச்சல் கடலோர போலீஸில் புகாா் தெரிவித்துள்ளாா்.
குளச்சல் அருகே முட்டம் கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மீனவா் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி குளச்சல் கடலோர போலீஸில் புகாா் தெரிவித்துள்ளாா்.
முட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதி அருகே கடந்த 28 ஆம் தேதி கரை ஒதுங்கி சடலத்தை கைப்பற்றி
குளச்சல் கடலோர பாதுகாப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது உயிரிழந்தவா் கடியப்பட்டணம் தாமஸ் தெருவைச் சோ்ந்த ஆன்றணி ஷாஜி (43) என்பதும், மீன் பிடிக்கச் சென்றவா் கரைக்கு திரும்பாததும் தெரியவந்தது. இந்நிலையில் உயிரிழந்த ஆன்றணி ஷாஜியின் உடல்கூறாய்வில் காயங்கள் இருப்பது சுட்டி காட்டப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து மீனவா் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கடலோர பாதுகாப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து, 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.