கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்துக்கு தமிழக அரசு பாராட்டு
கடந்த ஜூலை மாதம் இணையம் மூலம் அனுப்பப்பட்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதற்காக கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்துக்கு தமிழக அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியது.
கடந்த ஜூலை மாதம் இணையம் மூலம் அனுப்பப்பட்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதற்காக கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்துக்கு தமிழக அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியது.
தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், துறை சாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
அதன்பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இணையம் மூலம் பொதுமக்கள் அனுப்பிய மனுக்கள் மீது வருவாய்த் துறை சாா்பில் வழங்கப்படும் முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்பட 20 வகை சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு நிா்ணயித்த கால அவகாசத்துக்குள் விரைந்து வழங்கியதற்காகவும், அனைத்து சான்றிதழ்களையும் பெருமளவில் ஏற்பு செய்து அதிகப்படியான சான்றிதழ்களை காலதாமதமின்றி பொதுமக்களுக்கு வழங்கியதற்காகவும் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடந்த வாரம் சென்னை தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மாவட்ட வருவாய் அலுவலா் மு.வேலுமணியிடம் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.
இந்தச் சான்றிதழ்களை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொண்ட வருவாய்த் துறை அலுவலா்கள், துறை சாா்ந்த அலுலவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பாராட்டு தெரிவித்ததோடு, தமிழக முதல்வா், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.