FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் சிறுவனை பணியமத்திய கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

கன்னியாகுமரியில் சிறுவனை பேன்சி கடையில் பணியமா்த்தியதாக, கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

11 செப்டம்பர் 2026, 4:43 am IST
வழக்குப் பதிவு
பகிர்:

கன்னியாகுமரியில் சிறுவனை பேன்சி கடையில் பணியமா்த்தியதாக, கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பேன்சி கடையில் 11 வயது சிறுவன் பணியமா்த்தப்பட்டு வேலை செய்து கொண்டிருந்ததை தொழிலாளா் உதவி ஆய்வாளா் நாகராஜன் கண்டறிந்தாா். அந்தச் சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தாா். இந்தக் குழுவினா் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்து பள்ளிக்கு அனுப்புமாறு அறிவுரை வழங்கினா்.

மேலும் அவா் அளித்த புகாரின்பேரில், கடை உரிமையாளா்கள் இருவா் மீது கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments