பணியின்போது தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே பாறைக்கடை பகுதியில் கட்டட பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகே பாறைக்கடை பகுதியில் கட்டட பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவிதாங்கோடு அருகே வட்டம் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஜாா்ஜ் (68). இவா் பாறைக்கடை பகுதியில் கட்டடப் பணி செய்யும்போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தாா்.
அவரை சக தொழிலாளா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாா்ஜ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.