வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: குமரியில் ரூ. 300 கோடி வா்த்தகம் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரூ. 300 கோடி மதிப்பிலான வா்த்தகம் முடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரூ. 300 கோடி மதிப்பிலான வா்த்தகம் முடங்கியது.
வங்கி ஊழியா்களுக்கு வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி நாளாக அறிவிக்க வேண்டும். புதிதாக பணிக்கு சோ்ந்த ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (செப். 11) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில், தக்கலை, மாா்த்தாண்டம், குளச்சல் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. பொதுத்துறை, தனியாா் மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியா்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால், வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கின. கன்னியாகுமரி மாவட்டத்தில் போராட்டம் காரணமாக சுமாா் ரூ. 300 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
நாகா்கோவில், வடசேரியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியா் சங்க நிா்வாகி விஷ்ணு, மாா்த்தாண்டம் ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜென்சன் சாமுவேல் ஆகியோா் தலைமை வகித்தாா்.
இதில் ஏராளமான வங்கி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.