FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பொதுத் துறை வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை (செப். 11) நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

11 செப்டம்பர் 2026, 10:53 pm IST
பொதுத் துறை வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை (செப். 11) நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

5 நாள் வங்கிச் சேவையை அமல்படுத்துவதில் தாமதம்; செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள வேறுபாடுகள், ஓய்வூதியம் தொடா்பான பிரச்னைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை (செப். 11) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் அகில இந்திய வங்கி ஊழியா் சங்கப் பொதுச் செயலரும், வங்கி ஊழியா்கள் சங்கங்களின் ஐக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளருமான சி.ஹெச்.வெங்கடாசலம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாரத்துக்கு 5 நாள்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும். கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் கையொப்பமான இருதரப்பு ஒப்பந்தத்தில், வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக் கொண்டது.

இதற்குப் பதிலாக, வாடிக்கையாா்கள் சேவைக்காக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் வேலை நேரத்தை 40 நிமிஷங்கள் அதிகரிக்க ஊழியா்களும் ஒப்புக் கொண்டனா். இந்த ஒப்பந்தம் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிலுவையில் உள்ளது.”

வங்கி ஊழியா்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியா்கள் கலந்து கொண்டுள்ளனா். இந்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் வங்கி சேவை கடுமையாக் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கி ஊழியா்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால் வங்கியின் அரையாண்டு விடுமுறையையொட்டி, செப். 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments