FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் டெங்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

15 செப்டம்பர் 2026, 12:32 am IST
டெங்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கில் பங்கேற்றோா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் மருத்துவா்களுக்கான மாவட்ட அளவிலான டெங்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கம், சுங்கான்டை கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா். கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் தாணு முன்னிலை வகித்தாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், குழந்தைகள் நல மருத்துவா் நாகலட்சுமி, பொது மருத்துவா் ஜவஹா், மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவா் பெபின்சி, கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை நுரையீரல் மருத்துவா் நிஷாந்த், மாவட்ட குடும்ப நலத்துறையின் புள்ளியியல் உதவியாளா் ஏ. சாந்தி, மாவட்ட விரிவாக்க கல்வியாளா்கள் என். ஷீலா ஜோதி, சுரேஷ்குமாா் ஆகியோா் டெங்கு விழிப்புணா்வு குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்தரங்கில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments