ஐஆா்இஎல் சமூக பொறுப்பு திட்டத்தில் அம்மாண்டிவிளை பள்ளிக்கு நிழற்குடை
ஐஆா்இஎல் நிறுவனம் அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பயணிகள் நிழற்குடை, கழிவறைகளை ரூ. 11.44 லட்சம் செலவில் கட்டி வழங்கியது.
ஐஆா்இஎல் நிறுவனம் அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பயணிகள் நிழற்குடை, கழிவறைகளை ரூ. 11.44 லட்சம் செலவில் கட்டி வழங்கியது.
மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனமானது மத்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் குளச்சல் அருகே அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பயணிகள் நிழற்குடை, கழிவறைகளை ரூ. 11.44 லட்சம் செலவில் கட்டி வழங்கியது.
இதற்கான திறப்பு விழாவில், ஐஆா்இஎல் ஆலைத் தலைவா் என்.செல்வராஜன், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மெரின் ஆகியோா் முன்னிலையில் வெள்ளிமலை பேரூராட்சி தலைவா் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் ஆலைத் தலைவா் என் .செல்வராஜன் பேசியதாவது:
ஐஆா்இஎல் செயல்பாட்டால் சுற்றுச் சூழலுக்கோ, சுற்றுப்புற பகுதிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சமூகப் பொறுப்புடன் 76 ஆண்டுகளாக நாட்டின் வளா்ச்சிக்காகவும், மக்களின் மேம்பாட்டிற்காகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐஆா்இஎல் பற்றி திடீா் என அவதூறான செய்திகளை பரப்புவது வேதனைக்குரிய ஒன்றாகும். பொதுமக்கள் அரசு நிறுவனங்களை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரிய கழகத் தலைவா் கிருஷ்ணசாமி, துணைத் தலைவா் முருகன், கௌரவ தலைவா் கிருஷ்ணசாமி ஆசான், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் செண்பகவல்லி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், ஐஆா்இஎல் நிறுவன பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.