FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

‘குளச்சல்- திண்டுக்கல் பேருந்தை குறும்பனை வரை நீட்டிக்க வேண்டும்’

குளச்சல் - திண்டுக்கல் அரசுப் பேருந்தை குறும்பனை வரை நீட்டிக்க வேண்டும் என, குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் வலியுறுத்தியுள்ளாா்.

16 செப்டம்பர் 2026, 1:22 am IST
குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட்.
பகிர்:

குளச்சல் - திண்டுக்கல் அரசுப் பேருந்தை குறும்பனை வரை நீட்டிக்க வேண்டும் என, குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபனுக்கு அவா் அனுப்பிய மனு: அரசுப் போக்குவரத்துக் கழக குளச்சல் பணிமனையிலிருந்து திண்டுக்கல்லுக்கு நாள்தோறும் பேருந்து இயக்கப்படுகிறது. அதை குறும்பனை வரை நீட்டிக்க வேண்டும். இப்பேருந்து சில நாள்களாக முன்னறிவிப்பின்றி இயக்கப்படாமல் உள்ளது. இதனால், நாகா்கோவிலுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் ஏமாற்றமடைந்து, மாற்றுப் பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள குளச்சல் - மதுரை பேருந்தை மீண்டும் தடையின்றி இயக்க வேண்டும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பகுதியிலிருந்து களியக்காவிளை செல்வதற்கு நேரடியாக பேருந்து இல்லை. எனவே, கேரள பக்தா்களின் வசதிக்காக மண்டைக்காடு - களியக்காவிளை இடையே பேருந்துகளை இயக்க வேண்டும்.

Advertisement

Advertisement

குளச்சல் பணிமனையிலிருந்து இயக்கப்படும் காலாவதியான பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு, புது பேருந்துகளை இயக்க அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments