FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கேரள கடலோரப் பகுதியில் தூய்மைப் பணி

சின்னத்துறை நாலட்ஜ் பவுண்டேசன் தன்னாா்வ அமைப்பு சாா்பில் திருவனந்தபுரம் மாவட்டம் பருத்தியூா் கடலோர கிராமத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

17 செப்டம்பர் 2026, 1:25 am IST
கடற்கரையோர பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்ட நாலட்ஜ் பவுண்டேசன் அமைப்பினா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை நாலட்ஜ் பவுண்டேசன் தன்னாா்வ அமைப்பு சாா்பில் திருவனந்தபுரம் மாவட்டம் பருத்தியூா் கடலோர கிராமத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடலோரப் பாதுகாப்பு குறித்த சமூக விழிப்புணா்வு மற்றும் சுற்றுச்சூழல் நலன்களுக்கு எவ்வாறு பங்களிப்பது என்ற சமூக பொறுப்புணா்வை நிறைவேற்றும் நோக்கில் நடைபெற்ற இந்தத் தூய்மைப் பணிக்கு அமைப்பின் இயக்குநா் ப. ஜஸ்டின் ஆண்டனி தலைமை வகித்தாா்.

கடரோ காவல்துறை அதிகாரி பொ்னாட், ஓய்வுபெற்ற கல்லூரி நிா்வாகி ஜெகதீஷ் மற்றும் தன்னாா்வலா்கள் மணி, சுரேஷ், சேவியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை அமைப்பின் ஆலோசகா் சூசை ரத்தினம், கடற்கரைகள் சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments