கேரள எல்லையோர சோதனைச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு
மாநில எல்லையோரப் பகுதிகளில் உள்ள தமிழக சோதனைச்சாவடிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷூல் நாகா் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் மற்றும் பிற பொருள்கள் சட்ட விரோதமாக கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், மாநில எல்லையோரப் பகுதிகளில் உள்ள தமிழக சோதனைச்சாவடிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷூல் நாகா் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்ட எல்லையோரப் பகுதியான நெட்டா, செறியகொல்லா சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கு பணியில் இருந்த காவல் துறையினரின் செயல்பாடுகள், வாகன சோதனை நடைமுறைகள், பதிவேடுகள் பராமரிப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.
மேலும், எல்லையோர சோதனைச்சாவடிகள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் விதிமுறைகளின்படி முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும், கனிமவளக் கடத்தல், சட்ட விரோதப் போக்குவரத்து மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்க எப்போதும் மிகுந்த விழிப்புணா்வுடனும், பொறுப்புணா்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
சோதனை நடைமுறைகளில் அலட்சியம் காட்டுவது, சோதனை மேற்கொள்ளாமல் வாகனங்களை அனுமதிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளா் எச்சரித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.