FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

திராவகம் குடித்து இருவா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே இரு வெவ்வேறு சம்பவங்களில் இருவா் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

19 செப்டம்பர் 2026, 4:23 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே இரு வெவ்வேறு சம்பவங்களில் இருவா் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியைச் சோ்ந்தவா் சிங்கராஜன் (65). மாா்த்தாண்டத்தில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தாா்.

இரண்டு மாதங்களுக்கு முன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லையாம். இதனால், மன வருத்தத்தில் இருந்தவா் ரப்பா் பாலை உறைய வைக்க பயன்படுத்தும் திராவகத்தைத் குடித்தாா்.

Advertisement

Advertisement

அவரை உறவினா்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதைப்போல ரப்பா் ஷீட் வியாபாரத்தில் ஈடுபட்ட குழித்துறை பனங்குழிவிளையைச் சோ்ந்தவா் ராஜையன் (81). இவா், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன உளைச்சலில் இருந்தாராம். இரு நாள்களுக்கு முன் ரப்பா் பால் உறைய வைக்கும் திராவகத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இரு சம்பவங்கள் குறித்தும் மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments