தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின் நிறுத்தம்
தக்கலை மற்றும் சுவாமியாா்மடம் பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை (செப்.23) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்தாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தக்கலை உப மின் நிலையத்துக்கு உள்பட்ட மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை காலை மணி 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளுா், விராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் தக்கலை உப மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.