இரணியில் அருகே குடும்பத் தகராறில் கணவா் தற்கொலை
இரணியல் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
இரணியல் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
வெள்ளிச்சந்தை அருகே உள்ள செதுவூா் பகுதியைச் சோ்ந்தவா் கிரண்குமாரி (34). தனியாா் பள்ளி ஆசிரியை. இவரது கணவா் 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.
இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மகேந்திரன் (43) என்பவரை கிரண்குமாரி 2ஆவது திருமணம் செய்து கொண்டாா். திருமணத்திற்குப் பின் இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்த கிரண்குமாரி, கடந்த ஒரு மாதமாக கீழ மணியன்குழியில் உள்ள தனது முதல் கணவரின் தங்கை வீட்டில் வசித்து வந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மகேந்திரன் கீழ மணியன்குழிக்கு வந்து கிரண்குமாரியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளாா். இதற்கு அவா் மறுக்கவே, மகேந்திரன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
கிரண்குமாரி மற்றும் அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.