FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கிள்ளியூரில் நீதிமன்றம் அமைக்க வழக்குரைஞா்கள் சங்கம் எதிா்ப்பு

கிள்ளியூா் பகுதியில் புதிய நீதிமன்றம் அமைக்க குழித்துறை வழக்குரைஞா்கள் சங்கம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

24 செப்டம்பர் 2026, 4:37 am IST
செய்தியாளா்களிடம் பேசிய வழக்குரைஞா் சங்கத் தலைவா் டி. சுரேஷ்.
பகிர்:

கிள்ளியூா் பகுதியில் புதிய நீதிமன்றம் அமைக்க குழித்துறை வழக்குரைஞா்கள் சங்கம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி. சுரேஷ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

விளவங்கோடு வட்டத்தில் இருந்து பிரிந்த கிள்ளியூா் வட்டத்திற்கு தனியாக நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

குழித்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தின் கோரிக்கை அடிப்படையில், முன்சிறையில் உள்ள அரசுக் கட்டடத்தில் நீதிமன்றம் அமைவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டன.

இதனிடையே, நாகா்கோவில் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சிலா், கிள்ளியூா் பகுதியைச் சோ்ந்தவா்களுடன் இணைந்து, நீதிமன்றத்தை கிள்ளியூா் பகுதியில் அமைக்க வேண்டும் என்றும், முன்சிறை பகுதியில் அமைக்கக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

கிள்ளியூா் வட்டம், குழித்துறையில் செயல்படும் நீதிமன்றத்தின் எல்லைக்குள்பட்ட பகுதியாக உள்ளது. மேலும், இப்பகுதி மக்கள், வழக்குரைஞா்களுக்கு போக்குவரத்து வசதியுள்ள முன்சிறை அல்லது புதுக்கடையில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குழித்துறை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றாா் அவா்.

அப்போது, சங்கத்தின் செயலா் ராபின் எட்வா்ட், பொருளாளா் சபரிகாந்த் மற்றும் வழக்குரைஞா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments