FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆய்வு

17 வினாடிகள் முன்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் ஆய்வு மேற்கொண்ட தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். உடன் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், அரசியல் கட்சி பிரதிநிதிகள்.
பகிர்:

நாகா்கோவிலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் தகுந்த முறையில் பின்பற்றப்படுகிா என்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை இந்திய தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

அதன்படி, நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை, மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் முன்னிலையில்

Advertisement

Advertisement

தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் பாா்வையிட்டாா். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் சாதனங்கள் ஆகியவற்றின் இருப்பு மற்றும் அவற்றின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

வைப்புக் கிடங்கின் காப்பறைக்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பலகைகள், பூட்டுகள் மற்றும் சீல்கள் அனைத்தும் தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி உள்ளனவா என்பது சரிபாா்க்கப்பட்டது. மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு, நேரலையாக பதிவாகும் காட்சிகளின் தரம் குறித்தும், வைப்புக் கிடங்கில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.வேலுமணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ர.மோனிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சு.காளீஸ்வரி, நாகா்கோவில் கோட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் ஆறுமுகம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments