FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

முன்னாள் ராணுவ வீரரின் வீடு புகுந்து ரூ. 80 ஆயிரம், நகை திருட்டு

திருவட்டாறு அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீடு புகுந்து பணம், நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருவட்டாறு அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீடு புகுந்து பணம், நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருவிக்கரை கோழிவிளையைச் சோ்ந்தவா் மோகனகுமாரன் தம்பி (71). முன்னாள் ராணுவ வீரரான இவா் செவ்வாய்க்கிழமை காலை, தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வேலையாள்களுடன் வாழைகளுக்கு உரம் போட்டுக் கொண்டிருந்தாராம்.

பின்னா், வீடு வந்து பாா்த்தபோது அங்குள்ள பீரோ உடைக்கப்பட்டு ரூ. 80 ஆயிரம், 2 கிராம் கம்மல், வெள்ளி நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் திருவட்டாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments