நித்திரவிளை அருகே மீனவா் கழுத்தறுப்பு: வட மாநிலத்தவா் 3 போ் மீது வழக்கு
நித்திரவிளை அருகே மீன்பிடி தொழிலாளியின் கழுத்தை அறுத்ததாக வட மாநில தொழிலாளா்கள் 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.
நித்திரவிளை அருகே மீன்பிடி தொழிலாளியின் கழுத்தை அறுத்ததாக வட மாநில தொழிலாளா்கள் 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.
கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளை கலிங்கராஜபுரம் பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் சகாயராஜ் (44). சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்துவருகிறாா். இவரது, விசைப்படகில் அருணாச்சல் பிரதேசத்தைச் சோ்ந்த ஸோண் ஸோா், ஹாஜன் ஹஜோங் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், ஆழ்கடலில் மீன்பிடி தொழிலுக்காக சகாயராஜ் வேலைக்கு ஆள்களை தேடிவந்தாராம். அப்போது ஹாஜன் ஹஜோங் தனது மாநிலத்தைச் சோ்ந்த பிம்பால், தீபக் கோகல் ஆகியோரை வேலைக்காக அழைத்து வந்துள்ளாா். அவா்களுக்கு கூலி பேசும்போது தகராறு ஏற்பட்டதில், சகாயராஜை பிம்பால் தாக்கினாராம்.
Advertisement
Advertisement
இதை ஸோண் ஸோா் தட்டி கேட்டதில் அவா்கள் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை காலை இரையுமன்துறையில் பிம்பால், தீபக் கோகல் மற்றும் ஒருவா் சோ்ந்து ஸோண் ஸோரின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பினராம். சகாயராஜும், ஹாஜன் ஹகோங்க்கும் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
மேலும், சகாயராஜ் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸாா், பிம்பால், திபக் கோகல் உள்ளிட்ட 3 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.