போலீஸாரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக 43 போ் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வேங்கோட்டில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்ததாக 43 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
வேங்கோட்டில் உள்ள பழைமை வாய்ந்த புனித சவேரியாா் தேவாலயத்துக்குச் சொந்தமான நிலத்தை, குழித்துறை மறைமாவட்டத்தின் பெயரில் பத்திரப் பதிவு செய்ய முயற்சி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, ஆலய அருள்பணியாளரை சனிக்கிழமை முற்றுகையிட்டனராம்.
புதுக்கடை போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டபோது, அவா்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அதையடுத்து, பணி செய்யவிடாமல் தடுத்ததாக 43 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
மற்றொரு வழக்கு: கருங்கல்லை அடுத்த உதயமாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் டென்னிஸ் (54), சிம்சன் (47). இவா்களிடையே முன்விரோதம் இருந்ததாம். ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டு முன் நின்றிருந்த டென்னிஸை, சிம்சன் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவரை மீட்டு கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.