சங்கரன்கோவில் அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த இளைஞா் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சட்டவிரோதமாக வீட்டில் தீபாவளி பட்டாசுகள் தயாரித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சட்டவிரோதமாக வீட்டில் தீபாவளி பட்டாசுகள் தயாரித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில் அருகே தெற்குக் குருவிகுளம் அண்ணா காலனியைச் சோ்ந்த ராஜ் மகன் அந்தோணிமுத்து (36). இவா் வீட்டில் தீபாவளி பட்டாசுகள் தயாரிப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலருக்குத் தகவல் கிடைத்தது. அவா் அளித்த புகாரின்பேரில், தெற்கு குருவிகுளம் போலீஸாா் அந்தோணிமுத்து வீட்டில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து, சிவகாசிக்கு விற்பனைக்கு அனுப்பியது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, பட்டாசுகள், மூலப்பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.