FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

அனுமதியின்றி பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரித்த 3 போ் கைது

திருவேங்கடம் அருகே அனுமதியின்றி பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரித்த ஆலை உரிமையாளா் உள்பட மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 5:35 am IST
வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலை.
பகிர்:

திருவேங்கடம் அருகே அனுமதியின்றி பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரித்த ஆலை உரிமையாளா் உள்பட மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தொழிலாளா்கள் பட்டாசு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே அனுமதியின்றி பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக திருவேங்கடம் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

அதன்பேரில் வருவாய்த் துறையினா் பல்வேறு இடங்களில் திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் திருவேங்கடம் அடுத்துள்ள கொளக்கட்டாகுறிச்சி ஸ்ரீ ரங்கராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு ஆலையில் சோதனை நடத்தினா். அந்த ஆலை திரி மற்றும் பட்டாசு குழாயில் மண் அடைப்பதற்கான அனுமதி பெற்று விட்டு சட்ட விரோதமாக அனுமதியின்றி பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரிப்பது தெரியவந்தது.மேலும் சோதனையில் பட்டாசுகளும் ,மூலப்பொருள்களும் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக கட்டட உரிமையாளா் கருப்பையா பாண்டியன் மகன் பாலசுப்ரமணியன் (65 மற்றும் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த ஜெய்சங்கா் மகன் சிவா (35) வீரையா மகன் அம்புராஜ் ( 52) ஆகியோரைக் கைது செய்து ஆலைக்கு சீல் வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments