மாவட்ட மைய நூலகத்தில் யுபிஎஸ்சி இலவச மாதிரித் தேர்வு
மாவட்ட மைய நூலகத்தில் யுபிஎஸ்சி இலவச மாதிரித் தேர்வு வரும் 17 முதல் 24-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது.
மாவட்ட மைய நூலகத்தில் யுபிஎஸ்சி இலவச மாதிரித் தேர்வு வரும் 17 முதல் 24-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நூலகர் செ.காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 28-ஆம் தேதி முதன்மைத் தேர்வு தொடங்கவுள்ளது. அதை முன்னிட்டு மாவட்ட மைய நூலகம், ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் வரும் 17-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் 0462-2585226, 9626272890 ஆகிய எண்களில் வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட மைய நூலகர் அ.முத்துக்கிருஷ்ணனை 9789710361 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.