FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் தா்னா

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினா் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பகிர்:

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினா் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைப்பின் மாவட்ட தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். மாநில தலைவா் நூா் முகமது, தமுமுக மாவட்ட தலைவா் ரசூல் மைதீன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழனி, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி முதல்வா் வசந்தி மடோனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்தப் போராட்டத்தின்போது, சிறுபான்மை மத அமைப்புகள் ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோா் இல்லங்கள், பழங்குடி மக்களுக்கான நலவாழ்வு மையங்கள் நடத்துகின்றன.

இந்த சட்டம் அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைக்கும் உரிமை, கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமை மற்றும் சொத்துரிமைகளை பாதிக்கும். எனவே மக்களின் கல்வி, மருத்துவ சேவைக்கு எதிராக உள்ள இந்த சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments