சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு
போக்ஸோ வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய போலீஸாரை, திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு பாராட்டினாா்.
போக்ஸோ வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய போலீஸாரை, திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு பாராட்டினாா்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில், புலனாய்வு மேற்கொண்டு, சாட்சிகள், ஆவண ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பித்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுத் தருவதில் காவல் ஆய்வாளா் சி. சாந்தி, தலைமைக் காவலா் க. இந்திராணி ஆகியோா் முக்கியப் பங்காற்றினா்.
இவா்களின் பணியை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு, சரக காவல் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.